கருவில் உள்ள குழந்தையின் உடல்நலக் கோளாறை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

Report Print Printha in கர்ப்பம்

கருவில் உள்ள குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் தாயின் உடலில் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளை வைத்து எளிதில் அறியலாம்.

குழந்தையின் உடல்நலக் கோளாறை வெளிப்படுத்தும் அறிகுறி?
  • நம் உடலில் உள்ள HCG(Human chorionic gonadotropin) எனும் ஹார்மோன் கருவுற்ற பின் கருமுட்டையை பாதுகாக்கும் பணியை செய்கிறது. இது குறைவாக இருந்தால் குறைபிரசவம் அல்லது கருக்கலைப்பு உண்டாகும்.
  • கர்ப்பத்தின் எந்த மாதத்திலாவது ஒரு புறம் மட்டும் அதிகமான தசைப்பிடிப்பு மற்றும் ரத்தப்போக்கும் உண்டானால் அதனை உடனடியாக பரிசோதனை செய்து கண்டுபிடிக்க வேண்டும்.
  • கர்ப்ப காலத்தில் வெஜினா பகுதியில் இருந்து சிறுதுளி ரத்தப்போக்கு ஏற்பட்டால் கூட உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் இந்த அறிகுறி கருக்கலைந்து போவது, உதிரப்போக்கு போன்றவையால் கூட இருக்கலாம்.
  • கர்ப்ப காலத்தில் இடுப்பு வலி வருவது சாதாரணமான ஒன்றாக இருந்தாலும், முதுகு தண்டில் வலி மற்றும் கீழ் இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டால், அதனால் குறைப்பிரசவம் அல்லது கருக்கலைப்பு உண்டாகலாம்.
  • வெஜினாவில் இருந்து திரவம் வெளியேறும் போது அதிகமான நாற்றம், ரத்தம் அல்லது வலியை உண்டாக்குவதாக இருந்தால் அது கருக்கலைந்து போவதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
  • வயிற்றில் குழந்தையின் அசைவு இல்லைமலோ அல்லது குறைவாகவோ இருந்தால் அதற்கான பரிசோதனையை மருத்துவரிடம் செய்ய வேண்டும்.
  • கர்ப்ப காலத்தில் காலையில் காய்ச்சலாக இருப்பது இயல்பு. ஆனால் குறைவான Human chorionic gonadotropin(HCG) அளவுடன் காய்ச்சல் தொடர்ந்து வந்தால் அது கரு கலைய போவதற்கான ஆரம்ப அறிகுறியாகும்.
  • கர்ப்ப காலத்தில் உடலில் மற்றும் மார்பக பகுதியில் ஹார்மோன் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். அதனால் மார்பகங்கள் சிறிதாவது போன்று உணர்ந்தால் அது கரு கலைவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
  • குழந்தைகளின் இடம் மாறுவது அல்லது கர்ப்பப்பை குழந்தைக்கு அழுத்தம் தருவது போன்றவை காணமாக குழந்தையின் இருதய துடிப்புகள் குறையும் அறிகுறி தெரிந்தவுடன் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
  • குழந்தைகளின் உடலில் உள்ள பாகங்கள் சரியாக இயங்குகிறதா என்பதை கண்டறிய Intrauterine growth restriction(IUGR) எனும் பரிசோதனையை முன்கூட்டியே செய்தால் கருவிலேயே குழந்தையின் குறைபாடுகளை சரிசெய்து விடலாம்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...