தன் வருங்கால மனைவியை ஆசைக்காட்டி மயக்க ஆணுக்கு பணத்தை அள்ளி கொடுக்கும் கோடீஸ்வரர்! ஏன் தெரியுமா?

Report Print Raju Raju in உறவுமுறை

கோடீஸ்வரர் ஒருவர் தனது வருங்கால மனைவி தன்னை விரும்புகிறாரா அல்லது தன்னிடம் உள்ள பணத்தை விரும்புகிறாரா என்பதை கண்டுபிடிக்க வினோதமான ஒரு நடவடிக்கையை செய்யவுள்ளார்.

பெயர் வெளிவராத கோடீஸ்வரர் ஒருவருக்கு அழகான இளம்பெண்ணுடன் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் ஆனது.

இதையடுத்து தனது வருங்கால மனைவி தன் மீது உண்மையான காதல் கொண்டுள்ளாரா என்பதை அறிய கோடீஸ்வரர் விரும்பினார்.

ஏனெனில், அவர் முன்பு காதலித்த பெண் அவரை விட அவரின் பணத்தை தான் அதிகம் நேசித்தார் என்பதை அறிந்த கோடீஸ்வரர் மனம் உடைந்து போனார்.

அதே போல மீண்டும் தனது வாழ்வில் நடந்து விடக்கூடாது என நினைத்த அவர் HushHush.com என்ற இணையதளத்தின் உதவியை நாடினார்.

இதன் மூலம் அழகான ஒரு வாலிபர் கோடீஸ்வரரின் வருங்கால மனைவியை ஆசைக்காட்டி மயக்க பார்ப்பார், அப்படி அந்த பெண் அவர் அழகில் மயங்கினால் அவர் தன் மீது உண்மையான காதல் கொண்டிருக்கவில்லை என கோடீஸ்வரர் முடிவு செய்வார்.

இதற்காக நடிக்க வருபவருக்கு £15,000 பணம், சொகுசு வீடு மற்றும் கார்களை கோடிஸ்வரர் கொடுக்கவுள்ளார்.

இது குறித்து குறித்த இணையதளத்தின் நிறுவனர் ஆரோன் ஹர்பின் கூறுகையில், இது போன்ற விடயம் புதிதாக செய்யப்படுவது கிடையாது, பல கோடீஸ்வரர்கள் இப்படி வருங்கால மனைவியை குறித்து அறிய இந்த நடைமுறையை பின்பற்றியுள்ளனர்.

ஆனாலும் திருமணம் நிச்சயதார்த்தம் ஆன தம்பதி ஒன்று சேர வேண்டும் என்பதே எங்களின் எண்ணம், அவர்கள் பிரிவதை எங்கள் நிறுவனம் விரும்புவதில்லை என கூறியுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்