இணைய சேவையினை வழங்குவதற்கான செயற்கைக்கோளினை முதன் முறையாக ஏவியது SpaceX

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

உயர் தொழில்நுட்ப தொழில்முனைவரான எலன் மஸ்க் SpaceX எனும் செயற்கைக்கோள்களை ஏவும் நிறுவனத்தினை உருவாக்கியமை தெரிந்ததே.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட இந்த தனியார் நிறுவனம் ஏற்கனவே சில செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

இப்படியான நிலையில் தற்போது முதன் முறையாக இணைய சேவையினை வழங்குவதற்கான 5 செயற்கைக் கோள்களினை தனது நிறுவனத்தின் ஊடாக விண்ணிற்கு செலுத்தியுள்ளது.

Starlink எனும் இணைய சேவைக்காக 5 சிறிய செயற்கைக்கோளினை கொண்ட Falcon 9 ரொக்கட் ஆனது புளோரிடாவிலுள்ள Cape Canaveral Air Force ஏவுதளத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 10.30 இச் செயற்கைக்கோள்கள் புவியின் ஒழுக்கினை நோக்கி ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்