சந்திரயான் 2-ல் எடுக்கப்பட்ட நிலவின் நெருக்கமான புகைப்படம்....!

Report Print Abisha in விஞ்ஞானம்

சந்திரயான் 2-ன் உயர் தெளிவுத்திறன் கொண்ட கமெராவால் எடுக்கப்பட்ட நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 2-ன் லேண்டர் விக்ரமை நிலவுப் பரப்பில் மென்மையாகத் தரையிறக்கும் முயற்சியின் போது 2 கிலோமீட்டர் தூரத்திலிருந்து கிழே விழுந்தது. எனினும் ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆர்பிட்டரில் உள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட கமெரா நிலவின் தென் துருவத்தில் எடுத்த நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டுள்ள இஸ்ரோ, பல்வேறு பகுதிகளை அடையாளப்படுத்தி அறியும் வகையில் தெளிவான புகைப்படங்களை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

100 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்களில் 14 கிலோமீட்டர் நீளமும் 3 கிலோமீட்டர் விட்டமும் கொண்ட போகஸ்லாவ்ஸ்கி பள்ளத்தின் ஒரு பகுதி பதிவாகியிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அதில், 5 மீட்டர் மட்டுமே விட்டம் கொண்ட சிறிய பள்ளங்கள் மற்றும் 1 முதல் 2 மீட்டர் மட்டுமே உயரமுள்ள பாறைகளுடன் கூடிய நிலவின் நிலப்பரப்பு புகைப்படங்களில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

100 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப்பாதையில் இருந்து மிகத் தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட கமெரா இதில் இடம் பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers