அறையின் 2 வது கதவு..... திருமணமான ஒரு வருடத்தில் இறந்துபோன இளம் மருத்துவர்: நீடிக்கும் மர்மம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

டெல்லியில இளம்பெண் மருத்துவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் கடிதம் ஒன்றை அளித்துள்ளனர்.

அஸ்தா முஞ்சால் என்ற பெண் டெல்லியில் குரு தேக் பகதூர் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வடத்திற்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றது. அவரது கணவரும் ஒரு மருத்துவர் ஆவார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பணிக்குச் சென்ற அஸ்தா முஞ்சால் மறுநாள் அதிகாலை 6 மணியளவில் அவரது அறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

அஸ்தா உடலின் அருகே ஒரு ஊசியும் இருந்தது. கூடவே அவர் உடலில் ஊசி செலுத்தியதற்கான அடையாளமும் இருக்கிறது. இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற யூகத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என்றும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ள சில காட்சிகளை பயன்படுத்தவுள்ளோம் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஸ்தாவின் தந்தை கூறியதாவது, எனது மகள் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அவர் இறந்துகிடந்த அறையின் கதவு உடைக்கப்பட்டிருக்கிறது. அவள் ஓய்வெடுத்திருக்கும் அறைக்கு இரண்டு கதவுகள் இருக்கையில் எதற்காக கதவை உடைத்துள்ளார்கள்? இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.

உறவினர் ஒருவர் கூறியதாவது, மருத்துவமனையில் நடக்கும் முறைகேடுகளில் தலையிட்டு அஸ்தா புகார் அளித்தார். இதனால் அவள் மன உளைச்சலில் இருந்தார் என கூறியுள்ளார்.

தாய் கூறியதாவது, இறந்துபோன எனது மகளின் கண்களை தானம் செய்யவுள்ளோம், இதன் மூலம் எங்களது மகளை அடிக்கடி பார்த்துக்கொள்வோம் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்