பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு கழிவறை நீரை குடிக்க கொடுத்து தரையில் தூக்கி அடித்த தந்தை

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் தனது இரண்டு பிள்ளைகளுக்கு கழிவறை நீரை குடிக்க கொடுத்து தரையில் அடித்து கொடுமைப்படுத்திய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மதுவுக்கு அடிமையான தந்தை, தனது 12 வயது மகள் மற்றும் 8 வயது மகன் ஆகிய இருவரையும் கழிவறை நீரை குடிக்கவைத்து துன்புறுத்தியுள்ளார்.மேலும் மகனை தூக்கி தரையில் அடித்ததில் அவனது கை உடைந்துபோனது.

கொடுமை தாங்க முடியாமல் சிறுவர்கள் இருவரும் அலறும் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற போது தாய் வேலைக்கு சென்றிருந்துள்ளார். குடிகார தந்தையால் உடல்ரீதியாக சிறுவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் தாய் வேலைக்கு சென்றுவிடுவதால் இதுகுறித்து அவருக்கு தெரியவரவில்லை.

தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers