இவர் ஒரு நாட்டின் பிரதமர்தானா? தவறான ட்வீட்டால் கிண்டலுக்குள்ளான இம்ரான் கான்

Report Print Kabilan in தெற்காசியா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவினால் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

சமூக வலைதளங்களில் Active ஆக இருந்து வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, 9.81 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர். இதற்காகவே இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் அவர் பதிவிட்ட ட்வீட், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அதாவது, ‘யாரேனும் ஞானத்தை புரிந்துக் கொள்ள மற்றும் அதனை கண்டறிய வேண்டும் என்றாலும், மன நிறைவுடன் வாழ வேண்டும் என்றாலும், கீழே உள்ள ஜிப்ரானின் வார்த்தைகள் வழி வகுக்கும்’ என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.

ஆனால், அந்த புகைப்படத்தில் உள்ள எழுத்துக்கள் கவிஞர் ரவீந்திரநாத் தாகூருடையது. இம்ரான் கான் தவறாக கவிஞர் கலீல் ஜிப்ரானுடய வார்த்தைகள் என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் அதில் எழுத்துப்பிழையும் உள்ளது.

இதனைச் சுட்டிகாட்டி பாகிஸ்தானின் பத்திரிகையாளர் ஒருவர் Comment அடித்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து நெட்டிசன்களும் இம்ரான் கானை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

குறிப்பாக நபர் ஒருவர், ‘இம்ரான் உண்மையாகவே ஒரு நாட்டின் பிரதமர்தானா? ட்வீட் செய்வதற்கு முன்பாக அது யாருடையது என்பதை சரியாக குறிப்பிட வேண்டும் என்பது கூடவா தெரியாது’ என கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்