திருமணமான பெண்ணிடம் இளைஞன் செய்த செயல்! கணவர் கொடுத்த சரியான தண்டனையின் வீடியோ

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை பெண் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் ஒருகட்டத்தில் தொந்தரவுகளை பொறுத்துக்கொள்ள முடியாத அந்தப் பெண் நடந்தவற்றை அவரது கணவரிடம் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரின் கண் முன்னே மனைவியிடம் அந்த இளைஞர் தவறாக நடக்க முயன்றதை கண்ட அந்தப் பெண்ணின் கணவர், அந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்தார்.

பின்னர் தனது ஷூவை மனைவிடம் கொடுத்து அந்த இளைஞரை தாக்குமாறு மனைவிடம் கேட்டுக்கொண்டார்.

மனைவி சரமாரியாகத் தாக்கும் காட்சிகளை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் ஆத்திரம் தீரும் வரை இளைஞரை ஷுவால் அடித்தும், நீட்ணட குச்சியால் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல்துறையினர் வரும் வரை கட்டி வைத்து அடித்த அந்தப் பெண்ணும் அவரது கணவரும், பின் அவரை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்