உயிரோடு எரித்து கொல்லப்பட்ட கர்ப்பிணி சிறுமி! மீண்டும் நடந்த பயங்கர சம்பவம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் கர்ப்பமாக இருந்த சிறுமியை அவர் காதலன் உயிரோடு தீ வைத்து எரித்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

பீகார் மாநிலத்தின் Betia பகுதியை சேர்ந்த சிறுமியும், இளைஞரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

இதையடுத்து தன்னை திருமணம் கொள்வதாக இளைஞர் முதலில் கூறியதையடுத்து அது குறித்து சிறுமி அவரிடம் கேட்டார்.

ஆனால் உன்னை என்னால் திருமணம் செய்ய முடியாது என இளைஞர் கூறியதையடுத்து இது தொடர்பில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பின்னர் கோபமடைந்த இளைஞர் சிறுமியை உயிரோடு தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பியோடினார்.

80 சதவீத தீக்காயங்களுடன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கில் பொலிசார் ஏற்கனவே சிறுமியின் காதலனை கைது செய்துள்ள நிலையில் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென் இந்தியாவின் ஹைதராபாத்தில் பிரியங்கா ரெட்டி என்ற மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட நிலையில், வட இந்தியாவான பீகாரில் மீண்டும் அதே போல சிறுமி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்