ரஜினியின் காலா படத்தில் இலங்கை எழுத்தளர்களின் நாவல்

Report Print Shalini in சிறப்பு

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவரவிருக்கும் புகைப்படமே “காலா”. இந்த திரைப்படத்தின் முன்னோடிக் காட்சி நேற்று வெளியாகிய நிலையில் இந்த திரைப்படம் தொடர்பான புகைப்படங்கள் சிலவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் காலா பட விளம்பர படங்களில், ரஜினிகாந்த் ஒரு மேசைக்கு அருகில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு படம் உண்டு. இந்த புகைப்படத்திற்கும் இலங்கைக்கும் ஏராளமான தொடர்புகள் உள்ளன.

இந்த மேசையில் உள்ள புத்தகம் “கே.டானியல் படைப்புகள்” எனும் தலைப்பில் உள்ளன.

அந்த நூலில் ஆறு நாவல்கள் (1.பஞ்சமர், 2.கோவிந்தன், 3.அடிமைகள், 4.கானல், 5.பஞ்ச கோணங்கள், 6.தண்ணீர்) தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆறு நாவல்களுமே, இலங்கை ஈழத்தமிழர்களிடம் தலித்துகள் எதிர்கொண்ட வாழ்க்கையை பதிவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாவல்களின் ஆசிரியர் கே.டானியல் ஆவார்.

கே.டானியல், இலங்கை வடக்கு மகாணப்பகுதியின் ஆனைக் கோட்டையில் 1929 இல், ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர்.

1960களில் அங்கே எழுந்த தலித் எழுச்சியில் 1967 இல் தோன்றிய “தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின்” முன்னோடித் தலைவராவார்.

சீன சார்பு இடது சாரியத்துடன் இணைந்து இவர்கள் நடத்திய போராட்டங்கள் ஈழத்தில் பெரும் அதிர்வை உண்டாக்கியது.

ஈழத்தில் இயக்க ரீதியாக நடந்த முதல் ஆயுதப் போராட்டமே, “தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் சாதி எதிர்ப்புப் போராட்டம்” தான்.

இயக்கப் போராட்டக் களத்தில் மட்டுமல்லாமல், கலை இலக்கியத்திலும் செல்வாக்கைச் செலுத்தியது. டானியல் அப்படியொரு செல்வாக்கை செலுத்திய போராளித் தலைவராவார்.

அவருடைய எழுத்துகள் நேரடியாக தலித் பிரச்சனையை பேசியது. வலிகளையும், போராட்ட குணங்களையும் பேசியது.

அதே குணங்களை உடைய டானியலின் வாழ்நிலை அனுபவங்களும் அவரது இலக்கியத்தில் பதிவாகி இருந்தன. அதன் வழியே, அவர் ஈழ தலித் வராலாற்றையே இலக்கிய படைப்பாக்கினார்.

2003ஆம் ஆண்டில், புத்தா நத்தம் சாதிக் என்பவரால், அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட “கே.டானியல் கடிதங்கள்” என்னும் நூலில் இலங்கையின் தலித் போராட்டங்களை, ஈழத் தமிழர்களின் சாதிய இறுக்கத்தை, ஈழ இயக்கங்களின் போதாமைகள் உள்ளடக்கியுள்ளன.

இந்நூலை - கடிதங்களை - தொகுத்தளித்திருந்தவர் பேரா.அ.மார்க்ஸ் ஆவார்.

இவ்வாறான புத்தகங்களை அதை காலா திரைக்காட்சியில் கொண்டு வந்து குறியீடாக்கியிருக்கிறார் இயக்குனர் பா. ரஞ்சித்.

அந்த மேசையில் ராவண காவியமும் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...