பசுமாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் லஷ்மி கடாட்க்ஷம் இருக்கும் என பெரியோர்கள் கூறுவார்கள். அது மட்டுமல்லாமல் பசுவில் எல்லா தெய்வங்களும் குடி இருகின்றார்கள்.
எந்த பலனையும் எதிர்பாராமல் தன் ரத்தத்தையே பாலாக கொடுப்பது தான் பசு.
அதனால்தான் தெய்வசக்தி நிறைந்த ஆலயங்களில் கூட பசுமாடுகளை வளர்த்து கோ பூஜை செய்கின்றார்கள் .
அதோடு எவ்விதமான தோஷத்தையும் போக்கும் ஆற்றல் பசுவுக்கு இருக்கிறது.
ஒரு பெண் ருதுவானதும் ஏதாவது தோக்ஷங்கள் இருந்தால், கோ தானம் செய்வது மிகவும் நன்று .
ஆதி தமிழர்கள் கோவில்களில் விளக்கேற்ற பசுக்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தானம் செய்வதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.
அதோடு அடிக்கடி பசு தானம் செய்வது வம்ச விருத்தியை உறுதி செய்யும் என தர்ம சாஸ்திரம் கூறுகிறது.