இலங்கையில் குண்டுவெடிப்பு நடத்திய தாக்குதல்தாரிகளின் சொத்துக்கள் என்னவாகும்? வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் சொத்துக்களை முடக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினமான கடந்த 21ஆம் திகதி ஹொட்டல்கள் மற்றும் தேவாலயங்களில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 253 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் சொத்துக்களை முடக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் குறித்தும் அவர்களின் சொத்துக்கள் குறித்தும் சிஐடி பொலிசார் விசாரணை நடத்தி பட்டியலை தயார் செய்து வருவதாக அந்நாட்டு காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்