இலங்கை தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் வன்முறை சம்பவங்கள் நடந்ததா? வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in இலங்கை
92Shares

இலங்கை தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாக பதிவாகவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது.

இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாக பதிவாகவில்லை என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும், தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என காவல்துறை செய்தி தொடர்பாளர் ருவன் குணசேகரா கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்