சுவிஸ் விமானத்தில் வெடிகுண்டு புரளியை கிளப்பிய இந்தியர் கைது

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தவறான தகவல் அளித்த இந்தியர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிஸில் உள்ள ஜெனிவா விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று Aeroflot என்ற விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது.

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ நகருக்கு 115 பயணிகளுடன் விமானம் புறப்படும்போது பொலிசாருக்கு ஓர் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

அதில், Aeroflot விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் கூறியுள்ளார்.

இத்தகவலை தொடர்ந்து விமானம் திறப்பட்டு பயணிகள் அனைவரும் அவசரமாக இறக்கப்பட்டனர்.

பின்னர், வெடிகுண்டை செயலிழக்கும் அதிகாரிகள் விமானம் முழுவதும் சோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

வெடிகுண்டு புரளியை கிளப்பிய நபர் குறித்து விசாரணையை தொடங்கிய பொலிசார் சில மணி நேரங்களில் அவரை கைது செய்தனர்.

நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒரு இந்தியர் என்றும், குறிப்பிட்ட அந்த விமானத்தில் பயணிக்க காலதாமதம் ஆனதால் பொலிசாரிடம் தவறான தகவல் அளித்து விமானத்தை நிறுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது, பொலிசாரின் கடமையை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட இந்தியருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

எனினும், இந்த தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்ய அவருக்கு வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments