சுவிட்சர்லாந்தை உலுக்கிய வைரக் கொள்ளை: 49 மில்லியன் பிராங்க் இழப்பீடு கேட்கும் நிறுவனம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிஸ் விமானத்தில் இருந்து சுமார் 50 மில்லியன் பிராங்க் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை போன விவகாரத்தில், குறித்த விமான சேவை நிறுவனம் 48.4 மில்லியன் பிராங்க் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.

சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் சார்பில் அதன் வழக்கறிஞர் ஒருவர் இந்த இழப்பீடு விவகாரம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் அமைந்துள்ள விமான நிலையத்தில் கடந்த 2013 பிப்ரவரி மாதம் இந்த மாபெரும் கொள்ளை நடைபெற்றது.

பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் இருந்து சூரிச் பயணப்படவிருந்த விமானத்தில் திடீரென்று புகுந்த பொலிசார், அந்த விமானத்தின் சரக்கு பாதுகாக்கும் பகுதியில் இருந்த சுமார் 50 மில்லியன் பிராங்க் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க கட்டிகளை அள்ளிச் சென்றனர்.

ஆனால் பொலிஸ் உடையில், பொலிஸ் வாகனத்தில் வந்து கொள்ளையிட்டு சென்றவர்கள் பொலிஸ் அல்ல மாறாக கொள்ளையர்கள் என பின்னர் நடந்த விசாரணையில் தெரியவந்தது.

பயங்கர ஆயுதங்களுடன் வந்த 8 பேர் கொண்ட இந்த கும்பலானது விமானி, துணை விமானி மற்றும் விமான ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பிணைக்கைதிகளாக பிடித்து அந்த மாபெரும் கொள்ளையை அரங்கேற்றினர்.

மட்டுமின்றி இந்த கொள்ளை தொடர்பாக பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் சார்பில் எந்த தாக்குதல் நடவடிக்கையும் நடத்தப்படவில்லை. நாட்டை உலுக்கிய இந்த கொள்ளையை அடுத்து சம்பவம் நடந்த Helvetic விமானம் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் சுவிஸ் பொலிசாரின் ஒருங்கிணைந்த பல மாத விசாரணை மற்றும் தேடுதல் வேட்டைக்கு பின்னர், கொள்ளை போன வைரங்களில் ஒருபகுதியை மீட்டனர்.

மட்டுமின்றி தொடர்புடைய பல நபர்களையும் பொலிசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமும் 30 மில்லியன் யூரோ இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது.

இதில் முக்கிய குற்றவாளி என கருதப்படும் பிரான்ஸ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார்.

மட்டுமின்றி தங்களது குழுவினர் தான் அந்த கொள்ளையை மேற்கொண்டது எனவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்