சுவிஸ் பயண அட்டையின் விலையை உயர்த்த திட்டம்: கசிந்த ரகசிய தகவல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

முக்கிய அரசு ஆவணம் ஒன்று லீக்கானதையடுத்து, சுவிஸ் பயண அட்டையின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ள ரகசிய தகவல் கசிந்துள்ளது.

அந்த லீக்கான ஆவணத்திலிருந்து சுவிட்சர்லாந்தின் போக்குவரத்து கூட்டமைப்பு GA travelcard என்னும் பயண அட்டையின் விலையை அதிக அளவில் உயர்த்த பரிந்துரைத்துள்ளது தெரியவந்துள்ளது.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாக்கில் பயண அட்டையின் கட்டணம் 10 சதவிகிதம் உயர்த்தப்பட வேண்டும் என அந்த ஆவணம் பரிந்துரை செய்கிறது.

சுவிட்சர்லாந்தில் வாழும் கிட்டத்தட்ட 500,000 பேர் பயண அட்டை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

மேலும், தேவையில்லாதபோது பயண அட்டையை தற்காலிகமாக டெபாசிட் செய்து பணத்தை மிச்சப்படுத்தும் திட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளதும் அந்த ஆவணத்திலிருந்து தெரியவந்துள்ளது.

தற்போது 3,860 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருக்கும் பயண அட்டைக்கான கட்டணம், புதிய திட்டம் அமுலுக்கு வந்தால் 4,250 சுவிஸ் ஃப்ராங்குகளாக உயரும்.

ஆனால் விசாரித்தபோது பயண அட்டைக்கான கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று துறை தொடர்புடைய செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பயண அட்டை கட்டண உயர்வு தொடர்பான செய்திகள் வெளியானதையடுத்து அதற்கு பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers