கொரோனா வைரஸை கண்டறியும் பரிசோதனை: சுவிஸ் மருத்துவமனை கண்டுபிடிப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சீன ஆட்கொல்லி கொரோனா வைரஸை கண்டறியும் எளிய பரிசோதனை ஒன்றை சுவிஸ் மருத்துவமனை ஒன்று கண்டுபிடித்துள்ளது.

Geneva University Hospitals என்னும் சுவிஸ் மருத்துவமனைதான் இந்த முக்கிய கண்டுபிடிப்பை செய்துள்ளது.

அந்த பரிசோதனை மிக எளிமையானது, தொண்டை அல்லது மூக்கிலிருந்து சேகரிக்கப்படும் சளி போன்ற பொருள், ஒருவரது உடலில் தொற்றக்கூடிய கொரோனா வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக சீனாவிலிருந்து வருவோர், இருமல், காய்ச்சல், உடல் வலி மற்றும் சுவாச பிரச்சினைகளுடன் வந்தால், அவர்களுக்கு இந்த சோதனை செய்யப்பட உள்ளது. குறைவான அறிகுறிகள் கொண்ட நோயாளிகள் சாதாரண் சிகிச்சைகளுக்குட்படுத்தப்படுவார்கள்.

நிமோனியா போன்ற அறிகுறிகள் இருந்தால் கவலைப்படவேண்டியதுதான் என்கிறார் Geneva University Hospitals தொற்றுநோய்ப்பிரிவின் தலைமை மருத்துவரான Laurent Kaiser.

இந்த நோயை உண்டுபண்ணும் வைரஸை அடையாளம் கண்டுவிட்டோம் என்று கூறும் Kaiser, அதன் முழு மரபியல் குறியீடும் எங்களிடம் இருக்கிறது என்கிறார்.

இந்த வைரஸ் 70 சதவிகிதம் சார்ஸ் வைரஸை ஒத்திருக்கிறது என்கிறார் அவர். ஆனால், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என்று கூறும் Kaiser, இந்த தொற்றுநோய் எப்படி திடீரென தோன்றியதோ அதேபோல திடீரென மறைந்துபோகவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்