சுவிட்சர்லாந்தில் கொரோனா 3வது அலையை தவிர்க்க இது தான் ஒரே வழி! அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த WHO

Report Print Basu in சுவிற்சர்லாந்து

கொரோனாவுக்கு எதிராக போராட சுவிட்சர்லாந்து பயன்படுத்திய உத்தியை உலக சுகாதார அமைப்பு (WHO) நிபுணர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்-ஜெனரல் சிறப்பு தூதர் David Nabarro-வே சுவிட்சர்லாந்தின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் ஆசியாவை விட ஐரோப்பா மிகவும் பின்தங்கியிருக்கிறது.

மிக விரைவாக கட்டுபாடுகளை தளர்த்திய மற்றும் இரண்டாவது அலைக்கு போதுமான அளவு தயாராவதற்கு தவறிய நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று என David Nabarro விமர்சித்தார்.

வைரஸால் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட போது சிகிச்சை பெற சிரமப்பட்ட தனது சுவிஸ் நண்பரை மேற்கோளிட்ட David Nabarro, மக்களுக்கு முக்கிய தகவல்களை சிறப்பாக வழங்கும், மக்கள் தொகையை கண்காணிக்கும் மற்றும் நோய் பரவல் ஏற்பட்டால் விரைவாக செயல்பட வேண்டிய உள்ளூர் கட்டமைப்புகளில் சிக்கல் உள்ளது என கூறினார்.

ஐரோப்பாவில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை போதுமானதாக இல்லை. முதல் அலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் கோடை மாதங்களில் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் தோல்வியடைந்துவிட்டது.

இப்போது இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. தேவையான உள்கட்டமைப்பு இப்போது கட்டமைக்கப்படவில்லை என்றால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மூன்றாவது அலை ஏற்படும்.

சுவிட்சர்லாந்தில் அதிகமான கொரோனா தொற்று உள்ளன, குறிப்பாக பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் தொற்று அதிகமாக இருக்கின்றன.

அதிகாரிகளிடமிருந்தும், குடியிருப்பாளர்களிடமிருந்தும் மிகவும் வலுவான உத்தி தேவை.

ஆசிய குடிமக்கள் வைரஸைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தேவையான சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கு இணங்குவதில் சிறந்து விளங்குகின்றனர்.

ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் உள்ள மற்றொரு வேறுபாடு இது தான்.

பல மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளுக்கு உள்ள சவால் என்னவென்றால், ஊரடங்கை நாடாமல் வைரஸை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தான்.

ஏனெனில் இது மிகவும் மோசமானது. அதன் தாக்கத்தால் பெரும் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். ஊரடங்குகள் கடைசி முயற்சியாகும், இது தோல்வியின் அடையாளம் என David Nabarro கூறினார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்