ஆயிரக்கணக்கான பயனர்கள் ஹேக்கர்களால் குறிவைப்பு: எச்சரிக்கை விடுத்தது கூகுள்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

இவ் வருடம் ஜுலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப் பகுதியில் சுமார் 12,000 பயனர்கள் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இப் பயனர்கள் அனைவரும் உலகிலுள்ள 149 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள பயனர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று இந்தியாவில் 500 வரையான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2017 ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டின் இதே மாத காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஹேக் முயற்சிகளின் எண்ணிக்கையுடன் ஏறத்தாழ ஒத்துப்போவதாக கூகுள் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் 2019 ஜுலை முதல் செப்டெம்பர் வரையான காலப் பகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் சுமார் 1400 பயனர்கள் உலகளவில் தகவல் திருட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 121 பயனர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்