லண்டனில் தொடரும் ஆசிட் வீச்சு: இருவர் மீது மீண்டும் தாக்குதல்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் கடந்த சில வாரங்களாக மர்மநபர்கள் அங்கிருக்கும் பொதுமக்கள் மீது ஆசிட் வீசி வருவதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இருவர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள Bethnal Green பகுதியில் இருக்கும் Roman சாலையில் இரண்டு நபர்கள் சென்று கொண்டிருந்த போது மர்மநபர்கள் அவர்கள் மீது ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதை அறிந்த அங்கிருக்கும் நபர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அப்பகுதிக்கு தீயணைப்பு படையினர் மற்றும் முதலுதவி அளிக்கும் குழுவினர் விரைந்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை அங்கிருக்கும் கடை உரிமையாளர் ஒருவர் கண்டுள்ளார்.

அவர் கூறுகையில், தன்னுடைய கடைக்கு இரண்டு பெங்காலி இளைஞர்கள் வந்ததாகவும், அவர்கள் தான் இவர்கள் முகத்தில் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிவிட்டதாகவும், இதில் அவர்களுக்கு முகம் மற்றும் உடல்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், ஆசிட் வீசிய நபர்கள் உடனடியாக தப்பிவிட்டனர். அவர்களை தேடிவருகின்றோம். அவர்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்கும் படி கூறியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரின் உயிருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் அவர்கள் உடனடியாக கிழக்கு லண்டனில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் யாரும் இது தொடர்பாக கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

லண்டனில் கடந்த சில வாரங்களாகவே ஆசிட் வீச்சு சம்பவம் நடைபெற்று வருகிறது. மர்ம கும்பல்கள் தற்போது ஆயுதமாக ஆசிட்டை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு 20 மணி நேரத்திற்கும் ஒரு முறை ஆசிட் வீச்சு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers