பிரித்தானியா ராஜ குடும்பத்தை புகைப்படம் எடுத்த பெண்ணின் தற்போதைய நிலை

Report Print Raju Raju in பிரித்தானியா

கிறிஸ்துமஸ் தினத்தன்று பிரித்தானியா ராஜ குடும்பத்தை பெண்ணொருவர் புகைப்படம் எடுத்த நிலையில் அந்த புகைப்படத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

நாட்டின் நோர்போல்க் கவுண்டியில் உள்ள செண்ட் மேரி தேவாலயத்துக்கு கடந்த 25-ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று இளவரசர் வில்லியம், அவர் மனைவி கேட் மிடில்டன், இளவரசர் ஹரி மற்றும் அவரின் வருங்கால மனைவி மெர்க்கல் ஆகியோர் வந்தனர்.

ராஜ குடும்பத்தினரை பார்பதற்காக அங்கு மக்கள் அதிகளவில் கூடியிருந்தார்கள்.

கூட்டத்தில் இருந்த கரின் அன்வில் (39) என்ற பெண் நால்வரையும் தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார், பின்னர் அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் கரின் வெளியிட அது இன்று உலக புகழடைந்துள்ளது.

பிரித்தானியாவின் எல்லா பத்திரிக்கைகளிலும் அந்த புகைப்படம் அட்டை படமாக வந்துள்ளது, இதோடு ஜப்பான், கனடா அமெரிக்கா, ஸ்பெயின் பத்திரிக்கையிலும் குறித்த புகைப்படம் வந்துள்ளது.

எல்லா பத்திரிக்கையும் கரினை தொடர்பு கொண்டு தங்களுக்கு அந்த புகைப்படம் வேண்டும் என கோரியே அதை எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அந்த புகைப்படத்துக்கான உரிமையாளர் கரின் என்பதால் பல நிறுவனங்கள் அவருகான உரிமம் தொகையை வழங்கி வருகின்றன, இதன் மூலம் கரினுக்கு அதிகளவில் பணம் சேர்ந்து வருகிறது.

அவர் கூறுகையில், நான் சாதாரணமாக என் ஐபோனில் தான் புகைப்படம் எடுத்தேன், புகைப்படம் எடுப்பதில் நான் வல்லவர் எல்லாம் கிடையாது.

மொத்தம் எனக்கு எவ்வளவு பணம் வரும் என தெரியாது, ஆனால் இந்த பணத்தை என் மகளின் படிப்புக்காக செலவு செய்வேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்