பிரித்தானியாவின் முதல் சீக்கிய பெண் எம்.பி: நிழல் அமைச்சராக நியமனம்

Report Print Santhan in பிரித்தானியா
65Shares
65Shares
ibctamil.com

பிரித்தானியாவின் முதல் சீக்கிய பெண், தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரேமி கார்பின் அமைத்துள்ள நிழல் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் ஆளும் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கும், அந்த அமைச்சரவையை விமர்சிப்பதற்கும், எதிர்கட்சிக நிழல் அமைச்சரவையை அமைப்பது வழக்கம்.

இதனால் எதிர்க்கட்சியின் மூலம் ஒவ்வொரு துறைக்கும் நிழல் அரசுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்.

அவர்கள் அரசில் அத்துறையை வகிக்கும் அமைச்சரிடம் கேள்விகளை எழுப்புவது மரபாகும். எதிர்க்கட்சியானது மாற்று அரசு போல் செயல்படும்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் சீக்கியப் பெண்ணான பிரீத் கௌர் கில் பிர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் தொகுதியின் எம்.பியாக தெரிவு செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் பிரித்தானியா நாடாளுமன்றத்தின் உள்துறை தேர்வுக் குழுவ உறுப்பினராகவும் கடந்த ஆண்டு தெரிவு செய்யப்பட்டார்.

இதை எல்லாம் தொடர்ந்து தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரேமி கார்பின் தனது நிழல் அமைச்சரவையில் பிரீத் கௌர் கில்லை சர்வதேச வளர்ச்சிக்கான நிழல் அமைச்சராக நியமித்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்