கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிச் சென்ற கார், எப்படி தப்பினார் அவர்?: ஒரு அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டன் பேருந்து நிறுத்தம் ஒன்றில் பேருந்துக்காக ஒருவர் காத்திருந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு கார் மோதிச் சென்ற பின்னரும் அந்த நபர் உயிர் பிழைத்ததைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து நிறுத்தத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

லண்டனிலுள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் இருவர் பேருந்துக்காக காத்திருக்கின்றனர்.

அவர்களில் நீல நிற உடையணிந்த நபர் சிகரெட் புகைப்பதற்காக எழுந்து வர, மின்னல் வேகத்தில் வரும் ஒரு கார் அந்த பேருந்து நிறுத்தத்தின்மீது மோதிச் செல்கிறது.

பேருந்து நிறுத்தத்தின் கண்ணாடிகள் சுக்கு நூறாக சிதறிய நிலையில், அங்கு அமர்ந்திருந்தவருக்கு என்ன நடந்தது என அந்த நீலச்சட்டைக்காரர் பதறி ஓடிச் சென்று பார்க்க, அவரோ ஒரு சேதமுமின்றி எழுந்து வருகிறார்.

என்றாலும் கார் மோதிய அதிர்ச்சியில் நடுநடுங்கிப்போன இருவரும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டு ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து கொண்டு அழுவதைக் காட்டுவதுடன் வீடியோ நிறைவடைகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்