இப்படித்தான் இருக்குமாம் பிரித்தானிய இளவரசர் ஹரியின் குழந்தை: வெளியாகியுள்ள புகைப்படங்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இன்னும் சில நாட்களில் பிரித்தானிய இளவரசர் ஹரி மேகன் தம்பதிக்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில், இணையதளம் ஒன்று அவர்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் என்று கணித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

அது ஹரி மற்றும் மேகனின் முக அம்சங்களைக் கொண்டு, பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் என கணிக்கிறது.

பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அது ஹரியின் கண்களையும் மேகனின் தலைமுடியையும் கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஹரியின் குழந்தை ஆணாக இருக்குமா அல்லது பெண்ணாக இருக்குமா என பந்தயம் கட்டும் அமைப்பு ஒன்று பந்தயத்தையே நிறுத்தியுள்ளது.

ஏனென்றால் பெரும்பாலானோர் ஹரி மேகனுக்கு பிறக்கும் குழந்தை பெண்ணாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கே வந்து விட்டதால் இந்த முடிவை அந்த நிறுவனம் எடுத்துள்ளது.

அதுபோல அந்த குழந்தையின் பெயரும் டயானா என்பதாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கும் மக்கள் வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்