பிரித்தானிய இளவரசி மேகனுக்கு பிரசவம் ஆகிவிட்டது: ஒரு சர்ச்சை செய்தி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இதுவரை பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது காதல் மனைவி மேகனும் தங்கள் குழந்தையின் பிரசவ திகதி குறித்து எதுவும் கூறாததால், அவர்களது ரசிகர்கள் பலர் மேகனுக்கு பிரசவம் ஆகிவிட்டது என்றே கருதுவதாக பிரித்தானிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தங்கள் குழந்தை பிறக்கும் நிகழ்வை பொதுமக்கள் பார்வையிலிருந்து விலகி ஒரு தனிப்பட்ட நிகழ்வாக வைத்திருப்பதாக ஏற்கனவே தம்பதியினர் தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில் ஹரியின் முதல் குழந்தை பிறந்து விட்டது என்று கூறி அதற்கு ஆதாரமாக சில விடயங்களை கூறுகிறார்கள் மக்கள்.

முதலாவதாக சமீபத்தில் தம்பதியினர் வெளியிட்டிருந்த ஒரு நன்றி செய்தியில், The Duke, Duchess மற்றும் Baby Sussex சார்பில் நன்றி என்று தெரிவித்திருந்தார்கள்.

இளவரசர் வில்லியம் தம்பதி தங்கள் குழந்தை பிறக்கும் முன் இவ்வாறு குறிப்பிட்டதில்லை.

மேகனின் அழகியல் நிபுணரான Daniel Martin பிரித்தானியாவுக்கு வந்தாயிற்று. குழந்தையையுடன் முதன்முறை மேகன் போஸ் கொடுக்கும்போது அவருக்கு மேக் அப் போடுவதற்காக அவர் வந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.

இளவரசி கேட் தனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் ஒரு மாதம் முன்பு பிரசவ விடுப்பு எடுத்தார்.

அப்படி பார்த்தால் மேகன் கடைசியாக மார்ச் மாதம் 19ஆம் திகதி தனது கடைசி பொது நிகழ்ச்சியை முடித்தார்.

அப்படியானால் ஒரு மாதம் முடிந்து விட்டது. எனவே அவருக்கு ஏற்கனவே குழந்தை பிறந்திருக்க வேண்டும் அன்று அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.

அதேபோல் இளவரசர் ஹரியும் அடுத்த நான்கு மாதங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளையும் வைத்துக் கொள்ளவில்லை.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது நிச்சயம் மேகனுக்கு குழந்தை பிறந்திருக்கவேண்டும் என்று அவரது ரசிகர்கள் கருதுவதாக அந்த பிரபல பிரித்தானிய பத்திரிகை தெரிவித்துள்ளது.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers