பிரித்தானிய இளவரசருக்கு நெருங்கிய நண்பரின் கொடூர லீலைகள் அம்பலம்: கடும் அதிருப்தியில் அரச குடும்பம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் நெருங்கிய நண்பரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் டசின் கணக்கான சிறுமிகளை சீரழித்ததும் அவர்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியதும் அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவரும் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவும் 2001 காலகட்டத்தில் நெருங்கிய நண்பர்களாவர்.

தற்போது பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன், 14 வயதுக்கு உட்பட்ட டசின் கணக்கான சிறுமிகளை சீரழித்தது அம்பலமாகியுள்ளது.

மட்டுமின்றி, பல ஆயிரம் டொலர்களை செலவிட்டு சிறுமிகளை வலையில் வீழ்த்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சிறுமிகளை மட்டுமே வைத்து இவர் பாலியல் தொழில் நடத்தியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நேற்று நடந்த நீதிமன்ற விசாரணையில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது சிறார்களை கொண்டு பாலியல் தொழில் நடத்தியதற்காக குற்றம் சுமத்தப்பட்டது. இன்னொரு பாலியல் தொடர்பான வழக்கில் இருந்து அவர் சாமர்த்தியமாக தப்பியதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீதான வழக்கில், பாதிக்கப்பட்ட சிறார்கள் முன்வந்து விசாரணைக்கு உதவும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிறார்கள், ஆனால் அவர்கள் தற்போது இளம்பெண்களாக இருப்பார்கள், அவர்கள் முன்வந்து ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு எதிராக சாட்சியம் அளிப்பார்களாக என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறார்களை சீரழித்தது நிரூபணமான நிலையில், இந்த விவகாரத்தில் பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மகனான இளவரசர் ஆண்ட்ரூவின் பங்கு குறித்தும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தற்போது 66 வயதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2008 ஆம் ஆண்டு சிறார்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தினார் என்ற வழக்கிலேயே தற்போது சிக்கியுள்ளார்.

முன்னர் சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் தொடர்பில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் 18 மாத சிறை தண்டனை பெற்று கடந்த 2011 ஆம் ஆண்டு விடுதலையானார்.

அப்போது அமெரிக்க ஊடகங்கள் இளவரசர் ஆண்ட்ரூவின் நெருங்கிய நண்பர் என்ற அடைமொழியில் அந்த செய்தியை வெளியிட்டதால், பிரித்தானிய அரச குடும்பம் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்