பிரித்தானியாவின் பக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே உள்ள உணவகம் ஒன்றில் ஒரு கிண்ணம் தேநீர் 13 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெயில் காலமோ, குளிர்காலமோ பெரும்பாலனவர்களுக்கு சூடாக டீயோ, காபியோ குடிக்கவில்லை என்றால் வேலையே ஓடாது.
இன்னும் சிலருக்கு காலையில் எழுந்தவுடனே டீ குடித்தால்தான் அன்றைய தினமே முழுமை பெறும். அந்த அளவிற்கு தேநீர் மோகம் மக்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது.
ஆனால், ஒரு கிண்ணம் தேநீர் 13 ஆயிரத்து 800 ரூபாய் என்றால் டீ பிரியர்கள் சற்று அதிர்ச்சிக்குத்தான் உள்ளாவார்கள்.
லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே தி ரூபென்ஸ் என்ற உணவகத்தில் ஒரு கிண்ணம் தேநீர் 13 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வெள்ளைக் குடுவையில் தேநீர் பரிமாறப்படுகிறது. இந்த ஒரு குடுவையின் விலை 500 பவுண்டுகள் என கூறப்படுகிறது. இந்த குடுவையில் இருந்து சுமார் 3 கிண்ணங்கள் வரை தேநீர் பரிமாறலாம்.
இலங்கையிலிருந்து கொண்டு வரப்படும் பிரத்யேக தேயிலையால் உருவாக்கப்படும் இந்த தேநீர் உள்ளூர்வாசிகளை மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.