எங்கள் வீட்டின் மகிழ்ச்சியே போய்விட்டது: கணவரை பறிகொடுத்த இலங்கைத் தமிழ்ப்பெண்ணின் கதறல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கொள்ளையன் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த இலங்கைத் தமிழர் வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், அவர் இல்லாமல் எங்கள் வீட்டின் மகிழ்ச்சியே பறிபோய்விட்டது என கதறுகிறார் அவரது மனைவி.

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ரவி கதர்காமர் (54)தனது கடையில் வார இறுதி செய்தித்தாள்களை அடுக்கிக்கொண்டிருக்கும்போது, Alex Gunn (31) என்ற கொள்ளையன் அவரது கடைக்குள் நுழைந்தான்.

இது நடந்தது மார்ச் மாதம் 24ஆம் திகதி காலை 6 மணிக்கு.

கொள்ளையடிக்கும் எண்ணத்துடன் ரவியை தாக்கிய Alex, பணப்பெட்டியுடன் அங்கிருந்து தப்பினான்.

ஆனால் அந்த பணப்பெட்டிக்குள் வெறும் 100 பவுண்டுகள் மட்டுமே இருந்துள்ளது.

இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த ரவியைக் கண்ட ஒருவர் பொலிசாருக்கும் அவசர உதவிக்குழுவுக்கும் தகவல் அளித்தார்.

ரவி கதர்காமர் 54 (Image: Met Police)

மருத்துவ உதவிக்குழுவினர் எவ்வளவோ முயன்றும் ரவியைக் காப்பாற்ற முடியவில்லை.

இதற்கிடையில், முடிந்தவரை தனது அடையாளம் தெரியாதவகையில் எச்சரிக்கையாக தப்பினாலும், CCTV கமெராவில் கொள்ளையன் கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்ததையடுத்து, அவனது உருவத்தை கவனித்த பொலிசார், அந்த நபர் பல வழக்குகளில் சிக்கிய Alex Gunn என்பவர் என்பதை அறிந்து அவரை தேடிப்பிடித்து கைது செய்தனர்.

ரவியின் இழப்பை ஈடுசெய்யவே முடியாது என்று கூறும் Vignarani, சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விபத்தில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டவர் ஆவார்.

Alex Gunn (Image: CPS)

ரவியின் மனைவி Vignarani Aiyathirai, முதன் முதலாக தனது கணவர் ரவியை பதின்மவயதுடைய ஒருவராக இலங்கையில் சந்தித்து, பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டு, பல நாடுகள் சுற்றி கடைசியாக 2006ஆம் ஆண்டு பிரித்தானியாவில் குடியமர்ந்திருந்தனர்.

ஒரு மனிதரின் இழப்பு, குழந்தைகள் உட்பட எங்களில் பலரது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்கிறார் அவர்.

எங்களுக்காகவே வாழ்ந்த அவர், எங்களை எப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்திருந்தார், அவர் போனதும் எங்கள் வீட்டின் மகிழ்ச்சியே போய்விட்டது என்கிறார் Vignarani.

வழக்கு விசாரணையைத் தொடர்ந்து இம்மாதம் 8ஆம் திகதி Alex மீது, கொலை, கொள்ளை, திருட்டு முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

Alexக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இம்மாதம் 11ஆம் திகதி (நாளை மறு நாள், வெள்ளிக்கிழமை) வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

CCTV (Image: CPS)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்