சமீபத்திய ஆண்டுகளில் பிரித்தானிய மக்களை நடுங்க வைத்த சம்பவங்கள்: வெளியான பட்டியல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் வெள்ளியன்று பொதுமக்கள் மீது இளைஞர் ஒருவர் முன்னெடுத்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பிரித்தானியாவில் சமீபத்திய ஆண்டுகளில் அரங்கேறிய தாக்குதல் சம்பவங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் மசூதி ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது பிரித்தானியர் ஒருவர் வாகனத்தை செலுத்தியதில்,

ஒருவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயங்களுடன் தப்பினர். இந்த விவகாரத்தில் கொலை குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், முடிந்த அளவுக்கு பலரையும் கொல்ல திட்டமிட்டதாக தெரிவித்திருந்தார்.

2017 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் திகதி வாகனம் ஒன்றில் வந்த 3 பயங்கரவாதிகள் லண்டன் பாலத்தில் பாதசாரிகள் மீது மோதியதுடன்,

அருகாமையில் உள்ள மதுபான விடுதியில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் 48 பேர் காயங்களுடன் தப்பினர். இந்த மூவரையும் பொலிசார் பின்னர் சுட்டு வீழ்த்தினர்.

2017 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி மான்செஸ்டரில் நிரம்பி வழிந்த இசை அரங்கம் ஒன்றில் புகுந்து தற்கொலை குண்டுதாரி மேற்கொண்ட தாக்குதலில் 22 சிறார்கள் கொல்லப்பட்டதுடன், 59 பேர் காயங்களுடன் தப்பினர்.

லிபியா நாட்டு பெற்றோருக்கு பிரித்தானியாவில் பிறந்த 22 வயது Salman Abedi என்ற 22 வயது இளைஞரே இந்த தாக்குதலை முன்னெடுத்ததாக பின்னர் தெரியவந்தது.

2017, மார்ச் 22 ஆம் திகதி பிரித்தானிய பாராளுமன்றம் அருகே மர்ம நபரால் பொலிசார் ஒருவருக்கு கத்திக் குத்து காயம் ஏற்பட்டதுடன்,

வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் பாதசாரிகள் மீதும் வானத்தை மோதவிட்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

இதில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 20 பேர் காயமடைந்தனர். 2005 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் திகதி, நான்கு பிரித்தானிய இளைஞர்கள் சேர்ந்து 3 சுரங்க ரயில் நிலையங்களில் நாட்டு வெடிகுண்டு வெடிக்க செய்ததில் 52 பேர் கொல்லப்பட்டதுடன், 700 பேர் காயங்களுடன் தப்பினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் அந்த மூன்று இஸ்லாமிய இளைஞர்களும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்