இதுவும் யுத்தம்தான்... கொரோனாவுக்கெதிராக களமிறங்கிய ராணுவம்: கட்டி முடித்த பிரமாண்ட மருத்துவமனை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கொரோனாவுக்கெதிரான யுத்தத்தில் பிரித்தானிய ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது! லண்டனில் Nightingale மருத்துவமனை என்னும் 4,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்றை அமைத்துள்ள ராணுவம், கொரோனாவுக்கெதிரான இந்த போராட்டத்தை யுத்தத்துடன் ஒப்பிட்டுள்ளது.

ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பிரித்தானிய ராணுவத்தை தலைமையேற்று நடத்தியவரான கர்னல் Ashleigh Boreham, தன் பணிக்காலத்திலேயே இதுதான் கடினமான பணி என்று கூறியுள்ளார்.

அவரது தலைமையின் கீழ் ராணுவ வீரர்கள் இணைந்து கொரோனா நோயாளிகளுக்காக 4,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.

பத்து நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்ட அந்த மருத்துவமனை, இந்த வாரம் திறந்துவைக்கப்பட உள்ளது.

இதேபோல், மான்செஸ்டர், பர்மிங்காம் மற்றும் கிளாஸ்கோவிலும் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற மருத்துவமனைகளை உலகமெங்கும் உருவாக்க உதவுபவரான கர்னல் Boreham, இப்போது எங்கள் நாட்டுக்காக ஒரு மருத்துவமனையை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

அது ஒரு வேளை என் குடும்பத்தினருக்கு கூட உதவும் சூழல் ஏற்படலாம் என்று கூறும் கர்னல் Boreham, நான் மேற்கொண்ட பணிகளிலேயே இதுதான் பெரியது என்கிறார்.

என் தாத்தா Battle of the Somme என்ற யுத்தத்தில் பங்குகொண்டார் என்று கூறும் கர்னல் Boreham, இதற்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று எண்ணுகிறேன் என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்