இந்தியாவில் இருக்கும் பிரித்தானியர்களை அழைக்க முடிவு! எப்போது? வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

இந்தியாவில் இருக்கும் பிரித்தானியர்களை நாட்டிற்கு அழைத்து வர அரசு முடிவு செய்துள்ளதால், இதற்காக 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது. தற்போது இந்தியாவில்

35 ஆயிரம் பிரித்தானிய நாட்டவா் உள்ளனா்.

இவா்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இந்தியாவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை தொடா்பு கொண்டு தாங்கள் சொந்த ஊருக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, பிரித்தானிய அதிகாரிகளைக் தொடா்பு கொண்டு தூதரக அதிகாரிகள் பேசினா். அதன்படி அவா்களை தங்கள் நாட்டுக்கே அழைத்துக் கொள்ள பிரித்தானிய அரசு முடிவு செய்தது.

இதன்படி, லண்டனுக்கு 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. வரும் புதன்கிழமை கோவாவில் இருந்து 3 விமானங்களும், வரும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தலா இரு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இந்த விமானங்கள் மூலம் நாடு திரும்ப விரும்பும் அனைவரையும் அழைத்துச் செல்ல முடியாது. எனவே, அடுத்தகட்டமாக மேலும் பல விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த விமானத்தில் பயணிப்பது தொடா்பான விதிமுறைகளை தலைநகர் டில்லியில் இருக்கும் பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்