லண்டனில் ஆற்றுக்குள் குதித்த 16 வயது சிறுமியின் நிலை என்ன? அடுத்தடுத்த குதித்த சிறுமிகள்.. வெளியான பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் உள்ள பாலத்தில் இருந்து தவறுதலாக ஆற்றில் குதித்த 16 வயது சிறுமி கால் உடைந்த நிலையில் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டுள்ளார்.

லண்டனில் உள்ள Five Arches பாலத்தில் இருந்து Cray ஆற்றுக்குள் 16 வயது சிறுமி குதித்தார் என மருத்துவகுழுவினருக்கு தகவல் வந்த நிலையில் தீயணைப்பு துறையினருடன் அவ்ர்கள் அங்கு வந்தனர்.

பின்னர் கீழே குதித்ததில் கால் உடைந்த நிலையில் 16 வயது சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் அங்கு பல சிறுமி, சிறுவர்கள் அதே போல மேலிருந்து கீழே குதித்தபடி இருந்தனர்.

அவர்களை தீயணைப்பு துறையினர் கடுமையாக எச்சரித்தனர்.

இது தொடர்பாக லண்டன் ஆம்புலன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூடான வெப்பநிலை சமயத்தில் ஆற்றுக்குள் குதித்து நேரத்தை செலவிடும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தை பொறுத்தவரையில் சிறுமிக்கு அங்கேயே முதலுதவி கொடுத்துவிட்டு பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்