பிரித்தானியாவில் ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள பகுதிகள் இது தான்! வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லீஸ்டர் பகுதியில் மீண்டும் உள்ளூர் ஊரடங்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அதற்கு மத்தியில் ஒரு வாரத்தில் நாட்டில் கொரோனா வைரஸ் வழக்குகள் 9 பகுதிகளில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் ஊரடங்கு விதி அமுலில் உள்ளது. இருப்பினும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான தளர்வுகள் ஒரு புறம் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் நாட்டில் ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் காணப்படுவதால், லீஸ்டரில் உள்ளூர் ஊரடங்கு விதிக்கப்பட்டது.

(Image: REUTERS)

இந்நிலையில், தற்போது, நாட்டில் ஒரு வாரத்தில்(கடந்த வாரத்தில்) கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ள முக்கிய இடங்களை பொது சுகாதார இங்கிலாந்து அடையாளம் கண்டுள்ளது.

லீஸ்டர்(Leicester) மீண்டும் பூட்டப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு வெளிவருகிறது.

வடக்கு யார்க்ஷயரில் உள்ள Redcar மற்றும் Cleveland , Berkshire-ல் Wokingham மற்றும் Bolton போன்ற பிற பகுதிகளில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Redcar மற்றும் Cleveland-ல் இந்த எண்ணிக்கை 100,000 பேருக்கு 0.7 பாதிப்புகளில் இருந்து 5.1 ஆக உயர்ந்துள்ளது.

Wokingham-ல் இந்த எண்ணிக்கை 0.6 முதல் 3 ஆகவும், Bolton -ல் இந்த எண்ணிக்கை 15.8-லிருந்து 23.5 ஆகவும் உயர்ந்துள்ளது.

(Image: Mirror Online)

Barking மற்றும் Dagenham-ல் 100,000 பேருக்கு 1.4 முதல் 5.7 ஆகவும், Hammersmith மற்றும் Fulham-ல் 5.9 முதல் 12.4 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும், முதலில் கொரோனாவால் மிக மோசமான பாதிப்புக்குள்ளான லண்டன் மற்றும் இரண்டு பெருநகரங்களில் பாதிப்பு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் இதுவரை கொரோனாவால் 43,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இன்று வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின் படி, முதியோர் இல்லங்களில் 20,000 பேர் கொரோனா வைரஸால் இறந்துவிட்டதாகவும், ஐந்து குடியிருப்பாளர்களில் ஒருவர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்