இன்று நேரலையில் காணத்தவறாதீர்கள் என்று மதுபான விடுதி உரிமையாளர் வெளியிட்ட செய்தி... பின்னர் நடந்த பயங்கரம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கட்டிடம் ஒன்றின் மேல் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிக்கியிருப்பதாக தகவலறிந்து வந்த பொலிசார், அவரை மீட்கும் நடவடிக்கையில்இறங்கினர்.

ஆனால் அங்கு வந்த பிறகுதான், அந்த மதுபான விடுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியிருப்பதைக் கவனித்துள்ளனர் North Yorkshire பொலிசார். தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியதோடு, அந்த நபரையும் மீட்டனர்.

அபாய கட்டத்திலிருந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், இந்த சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரம் முன்பு, அந்த மதுபான விடுதி இருக்கும் இடத்திற்கு சொந்தக்காரரான Tim Sharp, பேஸ்புக்கில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.

அதில், இந்த கிராமத்தில் உள்ள வம்பு பேசும் அனைவருக்கும் ஒரு செய்தி... நிறைய வம்பு பேசுகிறீர்கள், இன்று உண்மை வெளிப்படும், அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

இன்று இரவு பேஸ்புக் நேரலையை காணத்தவறாதீர்கள், அப்புறம் வருத்தப்படுவீர்கள் என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

அதன் பின்னர்தான் அந்த மதுபான விடுதி தீப்பற்றி எரிந்தது. ஆக, என்ன நடந்தது என்பதை அறிவதற்காக பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்