கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிகளை பாதுகாக்கும் சக்தி வாய்ந்த உளவு நிறுவனம்!

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், அதற்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் போட்டியில் பல நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், தடுப்பூசி தயாரிப்பு ஆராய்ச்சி தகவல்களை பாதுகாக்க பிரித்தானியா தனதுஉளவு அமைப்பான MI5-ஐ பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து MI5-ன் இயக்குநர் ஜெனரல் கென் மெக்கல்லம் “ஆராய்ச்சித் தரவைத் திருட அல்லது நாசப்படுத்த முற்படும்விரோத சக்திகளுக்கு எதிராக நாங்கள் பணியாற்றுகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

"இந்த கொடிய வைரஸுக்குஎதிராக முதன்முதலில் பயன்படுத்தக்கூடிய தடுப்பூசியை உருவாக்குபவர்களுக்கு மிகப் பெரியஅளவில் பரிசுகள் நிச்சயம் கிடைக்கும்.

எனவே உலகெங்கிலும் உள்ள பிற நிறுவனங்கள் ஆராய்ச்சியில்மிகவும் ஆர்வமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டுள்ளதனித்துவமான அறிவுசார் சொத்துக்களைத் திருட முயற்சி நடைபெற்று வருகிறது தடுப்பூசிமேம்பாட்டு பணிகளுக்கு எதிராக பலவிதமான அச்சுறுத்தல்கள்” இருப்பதாக மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் தேசிய சைபர்பாதுகாப்பு மையம் (NCSC) ஜூலை மாதம், ரஷ்ய அரசின் ஆதரவுடன் ஹேக்கர்கள் உலகெங்கிலும்உள்ள கல்வி மற்றும் மருந்து நிறுவனங்களின் கோவிட் -19 தடுப்பூசி மற்றும் சிகிச்சை ஆராய்ச்சிகளைத்திருட முயற்சிப்பதாகக் கூறியிருந்தது.

COVID-19 தொற்றுநோயைத் தடுக்கஉலகளவில் 150 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன,மனித சோதனைகளில் 42 உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்