மீண்டும் மிக மோசமான நாளை பதிவு செய்த பிரித்தானியா: கடந்த 24 மணி நேரத்தில் உச்சம் தொட்ட துயரம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
3111Shares

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை லேசான சரிவை கண்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிக மரண எண்ணிக்கை கொண்ட மிகவும் மோசமான நாளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உருமாறிய புதிய வகை வீரியம் மிக்க கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மொத்த மரண எண்ணிக்கை 83,203 என உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 45,533 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3,164,051 என தெரிய வந்துள்ளது.

இதனிடையே, இதுவரை 2.4 மில்லியன் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவல் தொடங்கிய பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அதிக இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்ட நாளாக பதிவானது.

அன்று ஒரே நாளில் 1325 பேர்கள் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

மட்டுமின்றி பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கையும் எந்த நாளிலும் இல்லாத வகையில் 68,058 என உச்சம் கண்டிருந்தது. தற்போது அதே மோசமான நிலையை இன்றும் பிரித்தானியாவில் பதிவாகியுள்ளது.

மட்டுமின்றி, இந்த வாரம் முழுவதும், கொரோனா பரவலுக்கு பின்னர், பிரித்தானிய்ய வரலாற்றில் மிகவும் மோசமான வாரமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சராசரியாக தினசரி 931 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா பரவல் தொடங்கிய முதல் அலை வேளையில், அதாவது ஏப்ரல் 6 முதல் 12 வரையான காலகட்டத்தில் சராசரியாக நாள் ஒன்றிற்கு 920 பேர் மரணமடைந்திருந்தனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்