சீரியல் கில்லராவது எப்படி..?இணையத்தில் தேடிய மாணவர்:அவரது இன்னொரு முகம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் சீன இளம்பெண் ஒருவரைக் கொலை செய்த அமெரிக்க மாணவர் ஒருவர், சீரியல் கில்லராவது எப்படி, உடலை கரைப்பது எப்படி என்பதையெல்லாம் இணையத்தில் தேடியது குறித்து நேற்று நீதிபதிகளுக்கு ஆதாரத்துடன் விவரிக்கப்பட்டது.

YingYing Zhang (26) என்னும் சீன மாணவியை Brendt Christensen (29) என்னும் மாணவர் கொலை செய்த வழக்கின் விசாரணை இல்லினாயிஸில் நேற்றும் தொடர்ந்தது.

வறுமையிலிருக்கும் பெற்றோரை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்காக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் அமெரிக்காவுக்கு வந்தவர் Zhang.

சீரியல் கில்லராவது எப்படி, மோசமான செயல்கள் செய்வதன் மூலம் புகழ் பெறுவது எப்படி என்ற ஆசைகள் கொண்ட இரண்டாவது முகம் கொண்ட மாணவர் Brendt.

அன்று யாரையாவது கொல்ல வேண்டும் என புறப்பட்ட அவரிடம் சிக்கினார் Zhang. பொலிஸ் வேடமிட்டு Zhangஐ காரில் கடத்திய Brendt, அவரை பேஸ்பால் மட்டையால் அடித்து, கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, அவரது தலையை வெட்டியுள்ளார்.

ஆனால் Brendtதான் Zhangஐ கொலை செய்தார் என்பதற்கு வலுவான ஆதாரம் எதுவும் இல்லை. இதற்கிடையில் மணமான Brendtம் அவரது மனைவியும் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது தெரியவந்தது.

அதாவது திருமணம் ஆனாலும், தங்களுக்கு பிடித்தவர்களை காதலிக்கலாம் என்பதுதான் அது.

அதன்படி Brendtக்கு ஒரு காதலியும், அவரது மனைவிக்கு ஒரு காதலனும் இருந்தனர். பொலிசார் Brendtஇன் காதலியை வைத்தே அவரை சிக்க வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி அந்த பெண்ணின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக் மூலம், அவர்கள் பேசுவது பதிவு செய்யப்பட்டது.

Brendt பேசப்பேச, சமுதாயத்தில் முனைவர் பட்டம் பெற படிக்கும் ஒரு மாணவனாக உலா வந்த அவரது இன்னொரு இருண்ட பக்கம் வெளிவரத்தொடங்கியது. Brendtக்கு யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்று ஆசை.

வித்தியாசமான பாலுறவு, கடத்தல், வன்புணர்வு என அத்தனை குற்றங்களையும் செய்து பார்க்க அவருக்கு அலாதி ஆசை.

அப்படிப்பட்ட ஆசையில் சிக்கியவர்களில் ஒருவர்தான் Zhang. ஆம், Brendt தனது காதலியுடன் பேசும்போது, Zhang தவிர, வேறு 12 பெண்களையும் கொலை செய்திருப்பதாக தெரிவித்தார்

ஆனால் அந்த உடல்கள் எங்குள்ளன என்பது குறித்து தனது காதலி உட்பட யாரிடமும் கூறமாட்டேன் என்று அவர் கூறியதையடுத்து Zhangஇன் உடல் எங்கிருக்கிறது என்ன ஆனது எனது தெரியவில்லை.

ரகசியமாக பதிவு செய்யப்பட்ட இந்த உரையாடல்கள் நேற்று நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் போட்டு காட்டப்பட்டன. வழக்கு தொடர்கிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers