ஈரான் விவகாரத்தில் எனது நிலைப்பாடு இதுதான்! டிரம்ப் அதிரடி

Report Print Kabilan in அமெரிக்கா

ஈரான் விவகாரத்தில் கடந்த மூன்று நாட்களாக கூறி வருவது தான் தனது நிலைப்பாடு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் போர் ஏற்படாது என்றே நம்புவதாகவும், ஆனால் அப்படி போர் ஏற்பட்டால் அமெரிக்கா எளிதில் வென்று விடும் என்றும் டிரம்ப் முன்னர் தெரிவித்தார். அத்துடன் குறுகிய காலத்தில் அந்தப் போர் முடிவடைந்து விடும் என்பதால், தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை ஈரானுக்கு அனுப்ப வேண்டிய அவசியமும் இருக்காது என்றும் எச்சரித்திருந்தார்.

அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டிரம்ப் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் சென்றுள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், ‘ஈரான் விவகாரத்தில் கடந்த மூன்று நாட்களாக கூறி வருவது தான் எனது நிலைப்பாடு. இதில் போதிய கால அவகாசம் உள்ளதால் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை. அனைத்தும் சுமூகமாக முடியும் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்