நடுவானில் குழந்தைகளை பதறவைத்த நபர் கைது

Report Print Vijay Amburore in அமெரிக்கா

நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது, 'நாம் அனைவரும் சாகப்போகிறோம்' என குடிபோதையில் கத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த திமோதி நார்டன் (50) என்கிற நபர், டல்லாஸிலிருந்து ஓக்லஹோமா நகரத்தில் உள்ள வில் ரோஜர்ஸ் விமான நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துள்ளார்.

அப்போது திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து, அங்கு அமர்ந்திருந்த குழந்தைகளை நோக்கி, 'நாம் அனைவரும் சாகப்போகிறோம்' என சத்தமாக கத்தியுள்ளார். இதனை பார்த்ததும் பயணிகள் அனைவரும் பதறியுள்ளனர்.

உடனே வேகமாக வந்த பணிப்பெண், குழந்தைகளை கேலி செய்வதை நிறுத்திவிட்டு இருக்கையில் அமருமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுத்த திமோதி நார்டன் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து விமானம் தரையிறங்கியதும் பொலிஸார் அவரை பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை ஒழுங்கற்ற நடத்தை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அங்கு 15,000 டொலர்கள் பிணைத்தொகை செலுத்தியதும் வெளியில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்