அழகான திருநங்கை மீது இளைஞருக்கு ஏற்பட்ட ஈர்ப்பு! ஆயிரக்கணக்கானோர் பார்த்த வீடியோவால் நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் திருநங்கையை உயிராக காதலித்த நபரை பலரும் கிண்டலடித்தும், விமர்சித்தும் வந்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Philadelphia நகரை சேர்ந்தவர் மவுரிஸ் வில்லவ்பி. இவருக்கு பேஸ்புக் மூல பைத் என்ற திருநங்கையுடன் நட்பு ஏற்பட்டது.

பின்னர் இது காதலாக மாறிய நிலையில் இருவரும் தீவிரமாக காதலித்தனர்.

இந்நிலையில் பேஸ்புக் நேரலையில் திருநங்கையை காதலிப்பதாகவும், அவருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் மவுரிஸ் அறிவித்தார்.

அவரின் இந்த வீடியோ வைரலான நிலையில் 15000-க்கும் அதிகமானோர் இதை பார்த்தனர்.

ஆனால் இதன் பின்னர் சமூகவலைதளம் மற்றும் வெளி உலகில் மவுரிஸை பலரும் கிண்டல் செய்து துன்புறுத்தி வந்தனர்.

இதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் அவர் இருந்தார். இதையடுத்து தற்கொலை முடிவுக்கு வந்த அவர் அதற்கு முன்னர் பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், நீங்கள் என்ன வேண்டுமானாலும் என் காதலி பைத் பற்றி கூறுங்கள், அவள் பெண்ணாக பிறக்கவில்லை என நான் கவலைப்படவில்லை. அவளுடைய குறைபாடுகளை நான் நேசிக்கிறேன் என பதிவிட்டார்.

பின்னர் கடந்த திங்கட்கிழமையன்று மவுரிஸ் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மவுரிஸின் நெருங்கிய நண்பர் கூறுகையில், மன அழுத்தம் உள்ளிட்ட மன நோய் பிரச்சனையால் மவுரிஸ் தவித்து வந்தார் என கூறியுள்ளார்.

இதனிடையில் மவுரிஸின் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்