மகளின் திருமணத்தன்று தந்தை எடுத்த திடுக்கிட வைக்கும் முடிவு: சோகத்தில் குடும்பம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

மகள் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில், தந்தை வீட்டைக் கொளுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து, குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

நேற்று முன்தினம் Pittsburghஇலுள்ள தேவாலயம் ஒன்றில் Lauren என்ற பெண்ணுக்கும் Derek Drnevich என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அதே நேரத்தில் Edgewoodஇலுள்ள Laurenஇன் வீட்டில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் மளமளவென்று தீப்பற்றியது.

இதில் பெரிய சோகம் என்னவென்றால் வீடு தீப்பற்றி எரியும்போது Laurenஇன் தந்தையான John Evans வீட்டுக்குள் இருந்திருக்கிறார்.

அதைவிட அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால், மகளின் திருமணத்துக்கு செல்லாத Evansதான், வீட்டின் அடித்தளத்திலுள்ள சமையல் எரிவாயு இணைப்பை துண்டித்து தீப்பிடிக்கச் செய்திருக்கிறார்.

தீயில் எரிவாயு வெடித்துச் சிதறி வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்திருக்கிறது. தீப்பிடிப்பதற்கு சற்று முன் வரை Evans வீட்டின் முன் நிற்பதை அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

அத்துடன் Evansஇன் மொபைல் போனை, அவர் தனது காரிலேயே விட்டு வைத்திருக்கிறார்.

இவற்றின் அடிப்படையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் முடிவுசெய்துள்ளார்கள்.

மேலும் ஏற்கனவே தாங்கள் Evans வீட்டுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அவருக்கு மன நல பிரச்னைகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்