பொலிசாரால் அன்று நாயைப் போல கட்டி இழுத்து செல்லப்பட்ட நபர்: இன்று அவரின் நிலை என்ன?

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாண பொலிசாரால் கட்டி இழுத்து செல்லப்பட்ட வீடற்ற நபர், அந்த அவமானத்தில் இருந்து தற்போது மீண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த நபரின் கைது தொடர்பான பொலிசாரின் காணொளி காட்சிகள் பொதுமக்களின் பார்வைக்கு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அந்த வீடியோவை காண நேர்ந்த 43 வயது டொனால்ட் நீலி என்பவரே அந்த அவமானத்தில் இருந்து மீண்டு வருவதாக தெரிவித்தவர்.

குடியிருப்பு அற்றவரான டொனால்ட் நீலி, குறிப்பிட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி, கடந்த ஆகஸ்டு 3 ஆம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இதில் குதிரை மீதிருக்கும் இரு பொலிஸ் அதிகாரிகள் கைவிலங்கில் கயிறை பிணைத்து தெரு வழியாக நாயைப் போல இழுத்து சென்றனர்.

தாம் கைதாகி இழுத்து செல்லப்பட்டபோது வெட்கப்படவில்லை எனவும், ஆனால் அந்த காணொளி காட்சிகள் தம்மை நொறுக்கியது என தெரிவித்துள்ளார்.

அந்த வலி உண்மையில் நோகடித்தது என கூறும் நீலி, பொதுமக்கள் அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்கின்றனர் என்பது தமக்கு தெரியாமல் போனது என்றார்.

2016 ஆம் ஆண்டு முதல் சாலை ஓரத்திலேயே வசித்துவரும் நீலி, தமக்கு ஏற்பட்ட இந்த கொடுமை, பொதுமக்களால் அதிகம் பேசப்பட வேண்டும் எனவும்,

உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு நபரை பொலிசார் எவ்வாறு நடத்துகின்றனர் என்பதை மக்கள் உணர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை அத்துமீறியதாக கூறி பொலிசார் தம்மை 50 முறை கைது செய்துள்ளதாக கூறும் நீலி, ஆனால் முதன் முறையாக தாம் பொலிசாரால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்