தமிழனை காதலித்து கரம் பிடித்த வெளிநாட்டு பெண்... குவியும் வாழ்த்துகள்! வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in அமெரிக்கா

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் அமெரிக்க பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது அவரை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தட்டடி புதூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி செல்லையா - தவமணி. இவர்களுக்கு கந்தசாமி என்ற மகன் உள்ளார்.

கந்தசாமி, ஆராய்ச்சி படிப்புக்காக அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ சென்றிருந்தார். தற்போது இவர் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் அமெரிக்காவில் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் எலிசபெத் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

முதலில் நண்பர்களாக இருந்த இவர்கள், நாளடைவில் அது காதலர்களாக மாறினர். மூன்றாண்டுகளாக காதலித்து வந்தவர்கள் 5 நாள்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர்.

இந்நிலையில், இன்று பெற்றோர்களின் சம்மதத்துடன், கந்தசாமி எலிசபெத்தை தமிழக பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு கந்தசாமியின் உறவினர்கள் மற்றும் அருகில் உள்ள கிராமத்தினர் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், இணையவாசிகள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்