மகளை 9 குழந்தைகளுக்கு தாயாக்கிய தந்தை: முன்பின் தெரியாதவர்கள் ரூபத்தில் வந்த உதவி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

மகள் முறை கொண்ட 11 வயது சிறுமியை கடத்தி 19 ஆண்டுகள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, தனது 9 மகள்களுக்கு தாயாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன் பின் தெரியாத இருவர் தன்னைக் காப்பாற்றியதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார் அந்தப்பெண்.

அமெரிக்காவில் ஒரு பெண்ணைக் காதலித்துவந்த Henri Piette என்னும் நபர், அந்தப் பெண்ணை அடித்து உதைத்ததால் அவர் Henriயை விட்டுப் பிரிந்தார்.

அதற்கு பழி வாங்கும் விதமாக Henri, அந்தப் பெண்ணின் மகளான 11 வயதுடைய Rosalynn McGinnisஐ ஏமாற்றி பள்ளியிலிருந்து கடத்திக்கொண்டு மெக்சிகோவுக்கு சென்றார். அந்த சிறுமியை ஏமாற்றி தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி, தினமும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் Henri.

இது ஒரு நாள் இரண்டு நாளல்ல, 19 ஆண்டுகள் தொடர்ந்திருக்கிறது. விளைவு, Henriயின் 9 குழந்தைகளுக்கு தாயாகியிருக்கிறார் Rosalynn.

Henriயின் கட்டுப்பாட்டில் அக்கம் பக்கம் நகர முடியாமல், யாரிடமும் பேச முடியாமல் அடிமை வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த நிலையில், ஒருநாள் எல்லோரும் மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றிருக்கிறார்கள்.

அப்போது பணம் குறைவாக இருக்கவே, அங்கு வந்த ஒரு தம்பதி அவர்களுக்கு பணம் கொடுத்து உதவியிருக்கிறார்கள்.

அப்போது இதுவரை முன் பின் பார்த்திராத அந்த தம்பதி, Rosalynnஇடம் வந்து பேச முயல, Henri யாரையும் பேசவிடாமல் தடுத்து அங்கிருந்து அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஆனாலும் அவர்களை தேடிக் கண்டு பிடித்து விட்டிருக்கிறார்கள் அந்த தம்பதி. அந்தப்பெண் Rosalynnஇடம் வந்து, உங்களுக்கு ஏதோ பிரச்னை என்று தெரிகிறது, நீங்கள் சம்மதித்தால் நான் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன் என்று கூற, அவர்கள் உதவியுடன், சரியான சந்தர்ப்பம் பார்த்து தனது எட்டுக்குழந்தைகளுடன் வீட்டை விட்டு தப்பியிருக்கிறார் அவர்.

ஒரு வழியாக அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு உரிய அதிகாரிகளிடம் புகாரளிக்க, கைது செய்யப்பட்டுள்ளார் Henri.

முன் பின் தெரியாத அந்த தம்பதி தனக்கு ஏதோ பிரச்னை என்பதை தெரிந்துகொண்டு தாமாக வந்து உதவியதை இன்னமும் நம்ப முடியாமல் ஆச்சரியத்துடனும், அதே நேரத்தில் நெகிழ்ச்சியுடனும் விவரிக்கிறார் Rosalynn. வழக்கு விசாரணை தொடர்கிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்