நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

Report Print Gokulan Gokulan in காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுடன், அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மாலை நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் குருநாகல் மாவட்டத்திலும் இடைக்கிடையில் மணிக்கு 40 கிலோ மீற்றர் வரை காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்