என்னை புதைத்த இடத்தில் நீ ஆட்சி செய்ய போறியா? ஜெயலலிதா பேசிய பரபரப்பு வீடியோ

Report Print Raju Raju in சினிமா
0Shares
0Shares
Cineulagam.com

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகழ் பெற்ற அரசியல் தலைவராக உருவாவதற்கு முன்னர் திரையுலகில் பிரபலமான நடிகையாகவும் விளங்கினார்.

அதில் எம்.ஜி.ஆருடன் இரட்டை வேடத்தில் ஜெயலலிதா நடித்த அடிமைப்பெண் படம் அவர் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாகும்.

இந்த திரைப்படம் 1969ல் வெளிவந்தது. இதில் ஒரு காட்சியில், ராணியான ஜெயலலிதா ஒரு அறையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.

அப்போது வேலைகாரியான இன்னொரு ஜெயலலிதா, அக்கா என இவரை அழைத்து கொண்டே அவரருகில் வருவார்.

பின்னர் வேலைகாரி ஜெயலலிதா, நான் உன் சகோதரி என ராணியை பார்த்து சொல்ல, அதற்கு ராணி ஜெயலலிதா ’நீ சதிகாரி’ என்பார்.

பின்னர், என்னை புதைத்த இடத்தில் நீ ஆட்சி நடத்த போறியே, ஆட்டத்த அழிச்சு பதவி ஏற்க போறியே என ராணி ஜெயலலிதா, வேலைகாரி ஜெயலலிதாவை பார்த்து கூறிவது போல அந்த காட்சியில் உள்ளது.

தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு இது பொருந்துவதாக கூறி அந்த காட்சி பலரால் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments