ஈசியா சம்பாதிக்கலாம்: பிரான்ஸில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸில் பல்வேறு துறைகளில் தற்போது வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரான்ஸின் வேலைவாய்ப்பு நிறுவனமான Pole Emploi எந்தெந்த துறையில் இந்த வருடம் அதிக வேலை வாய்ப்பு உள்ளது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் wine தயாரிப்பு நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களின் தேவை அதிகளவில் உள்ளது.

பிரான்ஸின் கிராமங்களில் இது அதிகளவில் விதைக்கப்படுகிறது.

பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிக்கும் வேலைவாய்ப்பு உள்ளது. பாரீஸ் உணவகங்களில் waiter பணிகள் உள்ளிட்ட ஏராளமான பணிகள் உள்ளது.

இசையமைப்பாளர்கள், நடனத்தில் திறமையானவர்கள் போன்றவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் பிரான்ஸில் குவிந்துள்ளன.

பிரான்ஸில் மொத்தம் 12 மில்லியன் மரங்கள் உள்ளன. மரங்களை பராமரித்து, இலைகளை அழகாக்கும் பணியும் அதிகளவில் உள்ளது.

பிரான்ஸில் பிரெஞ்ச் தெரியாமல் ஆங்கில மொழி மட்டும் தெரிந்தவர்களுக்கு பிரான்ஸ் குடும்ப குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத்தரும் வேலையும் உள்ளது.

பொருட்களை கிடங்கில் பேக் செய்து வைக்கும் உடல் உழைப்பு வேலையுடன் உலகின் மிக பெரிய சுற்றுலா நாடான பிரான்ஸில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஊரை சுற்றி காட்டும் சுற்றுலா கைட் வேலையும் அதிகம் உள்ளது.

  1. Winegrowers and tree surgeons
  2. Maintenance technicians
  3. Waiters
  4. Restaurant workers
  5. Community workers
  6. Farmers
  7. Domestic helpers
  8. Carers
  9. Packing and warehouse work
  10. Musicians and dancers

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments