வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்காக ஈபிளின் புதிய முயற்சி

Report Print Kabilan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பிரான்ஸ் நாட்டில் வன்முறையின் போது பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு ஆதரவாக, நிதி திரட்டும் பணியில் ஈபிள் கோபுரம் இறங்கியுள்ளது.

பிரான்ஸில் கலாச்சார அமைச்சகம், பெண்கள் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஈபிள் கோபுர பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இணைந்து, பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது.

அதன்படி, பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தில் ‘Maintenant On Agit' எனும் குறியீட்டு வார்த்தை ஒளிரச் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச மகளிர் தினத்திற்காகவும் இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நிதி திரட்டி வரும், Now On Agit எனும் அமைப்பு இது குறித்து கூறுகையில், ‘பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக, பல பெண்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

அவர்களின் எதிர்கால வாழ்க்கை அமைதியாக அமைய முனைப்படுகின்றோம். அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யவும் முற்படுகிறோம்.

இதற்காக விழிப்புணர்வு நடத்தி, பொதுமக்களிடம் மேலும் நிதியை சேகரிக்க முடியும் என்று நம்புகிறோம்’ என தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்