நாஜிக்களுக்கு ஆதரவாக பேசிய ஜேர்மன் அரசியல்வாதிக்கு நேர்ந்த கதி

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் நாஜிக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல்வாதி Alexander Gauland - யின் ஆடைகள் திருடப்பட்டு அரைநிர்வாணமாக பொலிசாரால் அழைத்து செல்லப்பட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

AfD கட்சியை சேர்ந்த அரசியல்வாதி Alexander Gauland நீச்சல்குளத்தில் தனது ஆடைகளை களைத்து வைத்துவிட்டு, குளித்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, நபர் ஒருவர் இவரது ஆடைகளை திருடிக்கொன்று, நாஜிக்களுக்கு இந்த நீச்சல்குளத்தில் குளிப்பதற்கு இடமில்லை என உரக்க கத்திவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளான்.

இதனைத்தொடர்ந்து அங்கு வந்த பொலிசார், அரசியல்வாதியை பாதுகாப்பாக அழைத்து சென்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது.

இவர், இரண்டாம் உலகப்போரின் போது நாஜிக்கள் செய்தது சரியானது என அவர்களுக்கு ஆதரவாக பேசியதால் இவ்வாறு நடந்துள்ளது என்றும் அல்லது அரசியல் பின்னணி ஏதும் காரணம் உள்ளதா எனவும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்