பட்ஜட் விலையில் மோட்ரோலா அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி!

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

கடந்த மாதம் Moto C மற்றும் Moto C Plus ஆகிய இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக மோட்ரோலா நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் Moto C எனும் கைப்பேசியானது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்கையில் Moto C Plus ஆனது நாளைய தினம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் இதே தினத்தில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுகின்றது. இதனை இந்தியாவில் FlipKart தளத்தின் ஊடாக ஒன்லைனிலும் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Moto C கைப்பேசியானது இந்திய மதிப்பில் 5,999 ரூபாவாக காணப்படுகின்றது. எனினும் Moto C Plus கைப்பேசியின் விலை இதுவரை வெளியிடப்படவில்லை.

இக் கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் MediaTek Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 4,000 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments